*#நம்பிக்கை_இழக்காதீர்கள்…* ****************************** * வறுமையின் பிடியிலும் உயரத்தை அடைந்த.... ரொனால்டோவின் உருகவைக்கும் வெற்றிப் பயணம்.* *1985 பிப்ரவரி-5 இல் போர்ச்சுக்கல் நாட்டின் மதிரா என்னும் சிறு தீவில் ஒரு குழந்தை பிறந்தது. வறுமையின் கோரப்பிடியில் கருவிலேயே கலைக்க வேண்டிய அந்த குழந்தை தாயின் விடாப்பிடியினால் இந்த பூமியை வந்தடைந்தது. அந்த குழந்தைக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று பெயர் சூட்டினார்கள் குழந்தையின் பெற்றோர். ரொனால்டோவின் தந்தை தோட்ட வேலை செய்பவர். தாய் வீடு வீடாக சமையல் வேலைகள் செய்பவர். இந்த வேலையின் மூலம் அவர்கள் சம்பாதிக்கும் பணம் நிச்சயம் நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை பராமரிக்க போதவில்லை. தினசரி மூன்று வேளை உணவே அவர்களுக்குப் பெரும் சவாலாக மாறியது.* *இந்த நிலையில் ஒருநாள் ரொனால்டோவின் தந்தைக்கு ஒரு கால்பந்தாட்ட கிளப்பில் வேலை கிடைத்தது.* *மைதானத்தை பராமரிப்பது, பந்து பொறுக்கிப் போடுவது, விளையாட்டு வீரர்கள் தங்கும் இடங்களை சுத்தம் செய்வது என அங்கிருந்த அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். அங்கு தன்னுடைய தந்தையுடன் செல்லும் ரொனால்டோ அங்கு வீரர்கள் விளையாடும் விளையாட்டை இமைக்காமல் பார்த்தபடியே நிற்பார். பின்னர் அன்று வீடு திரும்பியதும் பிளாஸ்டிக் பாட்டிலைக் கொண்டு தன்னந்தனியே உதைபந்தாட்டம் விளையாடுவார்.* *இந்த ஆர்வத்தை பார்த்த அவருடைய தந்தை வீட்டில் இருந்த பழைய துணிகளைக் கொண்டு ஒரு பந்தை உருவாக்கி அதை ரொனால்டோவுக்கு பரிசளித்தார். ஏனெனில் ஒரு கால்பந்து வாங்குவதற்கு கூட அவர்களிடம் காசு இல்லை. இப்படியே தினமும் மைதானத்தை பார்த்தபடி நின்றிருந்த ரொனால்டோவிற்கு ஒரு நாள் அம்மைதானத்தில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. ரொனால்டோவின் தந்தை அக்கிளப் நிர்வாகத்திடம் கெஞ்சி தினமும் அங்கு விளையாட வரும் மாணவர்களுடன் ரொனால்டோவையும் விளையாட வைத்தார்.* *ஆனால் அம்மாணவர்கள் பணம் படைத்த குடும்பங்களில் இருந்து வருபவர்கள். ஆனால் ரொனால்டோவின் தந்தையோ மைதானத்தை சுத்தம் செய்பவர். கால்பந்து விளையாட கூட ரொனால்டோவிடம் காலணி இல்லை. தனது சகோதரனின் கிழிந்த காலணிகளை அணிந்து கொண்டு விளையாட செல்வார். இதனால் சக மாணவர்களால் மிக மோசமான முறையில் கேவலப்படுத்தப்படுவார். ஒரு காலணிக்கே வழியில்லாத உனக்கு கால்பந்தாட்டம் கேட்குதா? என்று கூறி அவமானப்படுத்தப்படுவார்.* *அவரது தந்தையின் தொழிலை காரணம் காட்டி ஒதுக்கப்படுவார். இவ்வாறு ரொனால்டோவின் அவமானங்கள் வெறும் மைதானத்தோடு நின்றுவிடவில்லை. அது அவரது வகுப்பறை வரை தொடர்ந்தது. ரொனால்டோ பாடசாலையில் மிக மந்தமான மாணவர். வகுப்பறையில் எப்போதும் அவனுக்கு கடைசி இடம் தான். இதனை காரணம் காட்டி தினமும் சக மாணவர்களும் ஆசிரியர்களும் அவனை மட்டம் தட்டிக் கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் இந்த தகவல் ரொனால்டோவின் தாயின் காதிற்கு எட்டியது.* *எனவே கல்வியை தூக்கி ஒரு மூலையில் போட்டுவிட்டு முழுநேரமாக உதைபந்தாட்டத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கினார். தாயின் அறிவுரையே ரொனால்டோவிற்கு உதைபந்தாட்டத்தில் மிகப் பெரும் சக்தியைக் கொடுத்தது. அதன் வெளிப்பாடு கால்பந்தாட்ட மைதானத்தில் தெரிந்தது. அங்கு ரொனால்டோவின் திறமைகளைக் கண்டு வாயடைத்துப் போன போர்ச்சுக்கல் ஸ்போர்ட்டிங் கிளப் ரொனால்டோவை அழைத்துச்சென்று பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தது. அப்போது அவருக்கு வயது வெறும் 11 மட்டுமே.* *ஆனால் தனது குடும்பத்தைப் பிரிந்து அவரால் அங்கு இருக்க முடியவில்லை. தினமும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுவார். இந்த நிலையை கண்டு அக்கிளப் நிர்வாகம் மீண்டும் அவரை அவரது கிராமத்திற்கு அனுப்பி வைத்தது. ஆனால் வீடு திரும்பிய ரொனால்டோவின் கண்களில் பட்டது அவனுடைய குடும்பத்தின் வறுமை தான்.* *இவ்வறுமையை நீ விரட்ட விரும்பினால் அதற்கு கால்பந்தாட்டமே ஒரே வழி என்று ரொனால்டோவின் உறவினர் ஒருவர் அறிவுரை வழங்கவே அது ஆழமாக அவருடைய மனதில் பதிந்தது. அடுத்த நாளே மீண்டும் ஸ்போர்ட்ஸ் கிளப் திரும்பினார் ரொனால்டோ. இம்முறை அவருடைய மனதில் சோகம் இருக்கவில்லை. தன்னுடைய குடும்பத்தின் வறுமையை விரட்ட வேண்டும் என்று வெறியே இருந்தது. அந்த வெறியுடன் மைதானத்தில் குதித்தார். மைதானத்தில் அவருடைய ஆட்டம் அனல் பறந்தது. அங்கிருந்த அனைத்து கிளப் நிர்வாகிகளின் கவனமும் ரொனால்டோவின் பக்கம் திரும்பியது.* *இப்படியே வருடங்கள் பல கடந்தன. ரொனால்டோவின் புகழ் போர்ச்சுக்கலையும் தாண்டி பரவ ஆரம்பித்தது. இவரின் திறமைகளைக் கண்டு வாயடைத்துப் போன இங்கிலாந்தின் மான்செஸ்டர் அணி 100 கோடிக்கும் அதிகமான பணம் கொடுத்து 2003இல் அவரை தங்களுடைய அணிக்கு வாங்கிக்கொண்டது. அங்கு பல சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. முதல் முறையாக மான்செஸ்டர் அணிக்காக களம் இறங்கினார். பல அனுபவமிக்க வீரர்கள் மத்தியில் ரொனால்டோவின் சாகசங்கள் அம்மைதானத்தையே வாய் பிளக்க வைத்தது.* *அன்று விளையாட்டை முடித்துக் கொண்டு ரொனால்டோ வெளியேறும் பொழுது முழு மைதானமும் எழுந்து நின்று கைதட்டியது. அந்த நொடியிலிருந்து ரொனால்டோவின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. அவர் தொட்ட அனைத்தும் துலங்க ஆரம்பித்தது. மைதானத்தில் ரொனால்டோவின் வேகமும், ஆக்ரோஷமும் உலகெங்கும் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. மிக விரைவிலேயே உலகின் டாப் கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் உயர்ந்து நின்ற ரொனால்டோ கால்பந்தாட்டத்தின் அனைத்து உயரிய விருதுகளையும் வென்றார். கின்னஸ் சாதனைகளையும் படைத்தார்.* *இன்று அவரின் சொத்து மதிப்பு சுமார் 35,000 கோடிகளையும் கடந்துவிட்டது. என்னதான் பணம், புகழ் என அனைத்தும் சேர்ந்தாலும் இவர் தனது இறந்த காலத்தை மறந்து விடவில்லை. உலகம் முழுவதும் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். இன்று வரை தனக்கு கிடைத்த பல உயரிய விருதுகள் மற்றும் தங்க காலணிகளை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு உலகெங்கும் கொடிய நோய்களினாலும், வறுமையினாலும் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு பல உதவிகளை வழங்குகிறார்.* *ஒருநாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது மகனை குணப்படுத்த, பணம் இல்லாத ஒரு தாய் உங்களின் கையொப்பமிட்ட ஜெர்சியை எனக்கு அனுப்பி வைத்தால் அதை ஏலம் விட்டு கிடைக்கும் பணத்தை கொண்டு என் மகனை குணப்படுத்துவேன் என்று எழுதினார். சில நாட்களுக்கு பின் அவருக்கு ரொனால்டோவிடமிருந்து பதில் வந்தது. அதில் ரொனால்டோவின் கையொப்பமிட்ட ஜெர்சியுடன் ஒரு லட்சம் டாலருக்கான காசோலையும் அனுப்பி வைத்திருந்தார். இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் அக்கறை கொண்டவராக இருக்கிறார்.* *ஒரு நேர்காணலில், யாரும் அறியாத குக்கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த உங்களால் எப்படி இவ்வளவு உயரத்தை அடைய முடிந்தது என ரொனால்டோவிடம் கேட்கப்பட்டபோது, நான் வெற்றி பெறுவேன் என்பதை யாரும் நம்பவில்லை. என்னையும், எனது தாயையும் தவிர. உங்களால் வெற்றி அடைய முடியுமென நீங்கள் முழுமையாக நம்பினால் அக்கணமே பாதி வெற்றியை நீங்கள் அடைந்து விட்டீர்கள். மிக விரைவிலேயே மிகுதியையும் அடைந்து கொள்வீர்கள். எனவே எந்நிலையிலும் நம்பிக்கை இழக்காதீர்கள் என கூறி முடித்தார்.* *பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!* *தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!* #முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க வேண்டும்…# *#வாழ்த்துகள்.* *#வாழ்க_வளத்துட