மறுபடி உறங்குங்கள்! - எங்கை உறங்க விட்டீங்க...? 

 

 ‘ தாயகக்கனவுடன் சாவினைத்தழுவிய சந்தனப்பேழைகளே!......

             தாயகத்தின் எழுச்சிக்கவிஞன்

’ புதுவை ‘ இரத்தினதுரையின்

    புகழ்பூத்த வரிகள் இவை!

தமிழுணர்வு ததும்பும் , சோகங்கலந்த வீரவரிகள்!

 

தலைவனை நெஞ்சிற்சுமந்தபடி, தமிழ்மண்ணில் விதையுண்ட அந்த மாவீர மறவர்களின் புனித கல்லறைகளின் முன்னே நின்று, அவர்களுக்குச் சொல்வதுபோல, நமக்கு நாமே உறுதி எடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள பாடல்!

 

‘ இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா குழியினுள் வாழ்பவரே? ‘

 

இதைக் கேட்கும்போது, உயிரையே உலுக்கியெடுத்துவிடுகிறது.

 

மேலும், யார் யார் அங்கு வந்திருக்கிறார்கள் என்று வரிசைப் படுத்துகிறார் கவிஞர்.

 

‘ உங்களைப்பெற்றவர் , உங்களின் தோழிகள், உறவினர் வந்துள்ளோம் - அங்கு

  செங்கள மீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்.

 

அவர் அதிற்குறிப்பிட்டிருப்பது, உண்மையான உணர்வுடன் வந்திருப்பவர்களை - 

  அல்லது, எதிர்காலத்திலும் வரக்கூடியவர்களை.

ஆனால், மறந்தும் ’ புலம்பெயர்ந்த தமிழர்கள் வந்துளோம் ’ என்பதைச் சேர்த்துக்கொள்ள அவருக்கு மனம் வரவில்லை.

ஏனெனில், இவர்களெல்லாம் வெறும் ‘ கொத்துரொட்டி வியாபாரிகள் ‘ என்பதை அவர் நன்கு புரிந்தேவைத்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அதையே உண்மையாக்கும் வகையில், ’ மாவீரர் வாரம் ‘ என்று தலைவரால் புனிதப்படுத்தப்பட்ட இந்த வாரத்தில்கூட , ஒருவரிலொருவர் சேறு வாரியிறைப்பதையே முக்கிய பணியாகச் செய்துகொண்டிருக்கிறார்கள் இந்த ‘ புலம்பெயர் தமிழர்கள் ‘.

உண்மையிலேயே மாவீரர்களை மதிப்பவர்களாக இருந்தால், இந்த வாரத்திலாவது தமது குடுமிபிடிச் சண்டையை நிறுத்தியிருக்கவேண்டாமா?

 

 

 

தொடரும்.....